ஹெய்டி வன்முறையில் சிக்கிக்கொண்ட நூற்றுக்கணக்கான கனேடியர்கள் பத்திரமாக மீண்டும் நாடு திரும்பியுள்ளனர்.ஹெய்டி ஜனாதிபதியின் பதவி விலகலை வலியுறுத்தி ஹெய்டியின் முக்கிய நெடுஞ்சாலைகளை மறித்து போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறன.
அங்கு முன்னெடுக்கப்பட்டுவரும் வன்முறைப் போராட்டம் காரணமாக சுமார் 100 இற்கும் அதிகமான கனேடியர்கள் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இவர்களுள் பத்து பேர் கொண்ட கனேடிய மருத்துவக்குழுவும் உள்ளடங்குவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இந்தநிலையில் வன்முறையில் சிக்கிக்கொண்ட நூற்றுக்கணக்கான கனேடியர்கள் பத்திரமாக மீண்டும் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹெய்டி வன்முறையில் சிக்கிக்கொண்டபோது சந்தித்த அனுபவங்களை அவர்கள் கனேடிய ஊடகங்களுக்கு தொடர்ச்சியாக வெளியிட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.





