
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள விசேட தேவையுள்ள குழந்தைகளின் கல்வி, உளவளர்ச்சி, நுண்திறன் மேம்பாடு முதலியவற்றினை முன்னேற்றுவதை நோக்கமாகக் கொண்டு இயங்கிவரும் நிறுவனம் HOPE ஆகும். 2016 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனத்தில் இன்றுவரை சுமார் 30 குழந்தைகள் பதிவுசெய்யப்பட்டு இருக்கின்றனர். அக் குழந்தைகளுக்காக "Hope"நிறுவனத்தினரால் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் நிகழ்வில், கனடா மொன்றியல் திருமலை ஒன்றியத் தலைவர் திரு. பத்மநாதன் கந்தையா அவர்களும் கலந்துகொண்டு ஒன்றியத்தின் சார்பில் உதவிகளை வழங்கினார்.