LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, January 23, 2019

ஐ.சி.சி.யின் முக்கிய மூன்று விருதுகளை வென்று அசத்திய கோலி

2018 ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரர், சிறந்த ஒருநாள் வீரர் மற்றும் ஆண்டின் சிறந்த வீரர் ஆகிய சர்வதேச கிரிக்கெட் சபையின் மூன்று முக்கிய விருதுகளை இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி வென்று அசத்தியுள்ளார்.

அதுமட்டுமல்லாது, ஐ.சி.சி.யின் கனவு டெஸ்ட், மற்றும் ஒருநாள் அணிகளின் தலைவராகவும் விராட் கோலி அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால், கோலியின் ரசிகர்கள் பெரிதும் மகிழ்ந்துள்ளனர்.

இதேவேளை, விராட் கோலி ஐ.சி.சி.யின் டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்திலும், ஒருநாள் மற்றும் ருவென்டி 20 தரவரிசையில் இரண்டாவதாகவும் உள்ளார்.

ஆனாலும் கடந்த வருடத்தை நிறைவு செய்யும் போது கோலி ஒருநாள் தரவரிசையிலும் முதலிடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது கடின உழைப்புக்கு கிடைத்த பரிசாக இந்த விருதுகளைக் கருதுவதாக கோலி, ஐ.சி.சி.யிடம் தெரிவித்துள்ளார். இதேபோல தொடர்ந்தும் பிரகாசிக்க விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

36 உறுப்பினர்கள் கொண்ட ஐ.சி.சி.யின் குழுவே, ஆண்டின் சிறந்த வீரர்களைத் தேர்வு செய்தது.

இதில், வளர்ந்துவரும் வீரர் விருதை இந்திய அணியின் விக்கெட் காப்பாளர் ரிஷப் பந்த் பெற்றுள்ளார். இவர், இங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலிய மண்ணில் சதம் பெற்ற முதல் இந்திய விக்கெட் காப்பாளர் என்ற சாதனையை கடந்த வருடம் படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட் உலகில் நன்நடத்தைகளை வெளிப்படுத்தியதற்காக நியூசிலாந்து அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் விருது வென்றுள்ளார். ஐ.சி.சி.யின் சிறந்த நடுவராக இலங்கையைச் சேர்ந்த குமார் தர்மசேன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, ஐ.சி.சி.யின் கடந்தாண்டுக்கான கனவு டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் விராட் கோலியுடன், நியூசிலாந்தின் ரொம் லாதம், கேன் வில்லியம்சன், ஹென்றி நிகோல்ஸ், இலங்கையின் திமுத் கருணாரத்ன, இந்தியாவின் ரிஷப் பந்த், ஜஸ்பிறிட் பும்ரா, மேற்கிந்திய தீவுகளின் ஜேசன் ஹோல்டர், தென்னாரிக்காவின் ரபாடா, அவுஸ்ரேலியாவின் நதன் லயோன் மற்றும் பாகிஸ்தானின் மொஹம்மட் அப்பாஸ் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

அதேபோல கனவு ஒருநாள் அணியில், கோலியுடன் இந்தியாவின் ரோகித் சர்மா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரிட் பும்ரா, இங்கிலாந்தின் ஜொனி பயாஸ்ரோவ், ஜோ ரூட், ஜோஸ் பட்லர், பென் ஸ்ரோக்ஸ், நியூசிலாந்தின் ரோஸ் டெய்லர், பங்களாதேஷின் முஸ்ராபிஹூர் ரஹ்மான் ம

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7