LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, January 23, 2019

வட.மாகாண ஆளுநருக்கும் பிரதேச செயலாளர்களுக்குமிடையில் விசேட சந்திப்பு

வடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கும் ஆளுநர் சுரேன் ராகவனுக்குமிடையிலான விசேட சந்திப்பொன்று யாழில் இடம்பெற்றுள்ளது.

யாழ். நூலக கேட்போர் கூடத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) முற்பகல் இடம்பெற்றது. வடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களிலும் காணப்படும் காணிகள் மற்றும் நீர்வளங்கள் அவற்றில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது விரிவாக ஆரயப்பட்டன.

இம்மாவட்டங்களில் 2009ஆம் ஆண்டு முதல் பாதுகாப்பு படைகளிடமிருந்து விடுவிக்கப்பட்ட அரச மற்றும் தனியார் காணிகளின் முழுமையான விபரங்கள், அவற்றில் மீள்குடியேறிய மக்களின் முழுமையான விபரங்கள் குறித்து ஆளுநர் கேட்டறிந்து கொண்டார்.

அத்துடன், அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வீட்டுத்திட்டங்கள், ஏனைய உதவித்திட்டங்கள் தொடர்பிலான முழுமையான அறிக்கையினை சமர்ப்பிக்குமாறும் ஆளுநர் அவர்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

இச்சந்திப்பில் ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன், யாழ், முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களின் மாவட்ட செயலாளர்களும், கிளிநொச்சி மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளரும் இம்மாவட்டங்களின் அனைத்து பிரதேச செயலாளர்களும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.


 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7