மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு, கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுகளில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள சூரிய மின் சக்தித்திட்டம் தொடர்பான கூட்டம் 24.01.2019 அன்று காலை 10 மணிக்கு மாநாட்டு மண்டபத்தில் அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் நடைபெறவுள்ளது.
அரசாங்க அதிபர், இலங்கை நிலைபேறுதகு சக்தி அதிகாரசபை பணிப்பாளர் நாயகம் மற்றும் பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர் உள்ளிட்டோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.







