
நாடாளுமன்றத்தில் உள்ள சபாநாயகர் அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே இக்கருத்தினைத் தெரிவித்துள்ளார்.
குறித்த கலந்துரையாடலில் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ஹெனா சிங்கர், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் தீபிகா உடகம, பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார அமைச்சுக்களின் மேலதிக செயலாளர்கள் இராணுவ அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது உலக அமைதியை நிலைநாட்டுவதில் இலங்கையின் பாதுகாப்புத் துறையினரின் பங்களிப்பானது நாட்டுக்குக் கிடைத்த கௌரவம் எனத் தெரிவித்த சபாநாயகர் கருஜயசூரிய, ஐ.நா அமைதி காக்கும் படையில் இலங்கை தொடர்ந்தும் ஆக்கபூர்வமாக செயற்படும் எனவும் குறிப்பிட்டார்.
இக்கலந்துரையாடலில் அண்மையில் மாலியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த இலங்கை இராணுவ வீரர்கள் தொடர்பாக கவனத்தில் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
