
மாலி தாக்குதலில் உயிரிழந்த இராணுவ வீரரின் குடும்பத்தினரை பொலனறுவையில் இன்று (புதன்கிழமை) சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”பாதுகாப்பு ரீதியில் பல்வேறு நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், அமெரிக்காவுடன் இதுவரை அவ்வாறானதொரு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவில்லை.
ஆனால், இலங்கையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை ஏற்படுத்திக் கொள்வதற்கு அமெரிக்கா விருப்பம் தெரிவித்துள்ளது. அது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இலங்கையில் அமெரிக்க இராணுவ முகாமொன்றை ஸ்தாபிக்க போவதாக விமல் வீரவன்ச உள்ளிட்ட மஹிந்த அணியினர் கட்டுக்கதைகளை பரப்பி வருகின்றனர்.
ஆனால், அதில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லை. அவ்வாறானதொரு முகாம் அமைப்பதற்கு அமெரிக்கா கோரவும் இல்லை. அவர்கள் கூறுவது போன்று வேறு நாட்டவர்களை எமது நாட்டிற்குள் இராணுவ முகாம் அமைப்பதற்கு அனுமதிக்க வேண்டிய அவசியமுமில்லை. அதற்கு நாம் இடமளிக்க போவதும் இல்லை.
ஆனால், எதிர்காலத்தில் அமெரிக்காவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்தும் யோசனையை நாம் புறக்கணிக்கப் போவதில்லை. எமது நாட்டிற்கு சாதகமான வகையிலான நடவடிக்கையொன்றை முன்னெடுப்போம்” எனத் தெரிவித்தார்.
