எட்மன்டன் பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் படுகொலை பிரிவு விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றது.ஒரு பெண் மீது தாக்குதல் நடத்தியதாக இன்று (புதன்கிழமை) கிடைக்க பெற்ற தகவலை அடுத்து அங்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இதன் பின்னர் பெண் மீது தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படுபவர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தொடர்ந்தும் இரண்டு குழந்தைகள் இறந்து கிடந்த தென்கிழக்கு எட்மன்டனில் குடியிருப்பிற்கு அதிகாரிகள் சென்றனர்.
மேலும் அவர்களது இறப்பிற்கு காரணம் இதுவரை தெரிவிக்கப்படாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





