தாயின் அன்பு இல்லாமல் உலகமே இல்லை என திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.கத்தோலிக்க தலைமையகமான இத்தாலியின் உரோமில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனையின் போதே திருத்தந்தை பிரான்சிஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “சில நேரங்களில் பிள்ளைகள் தவறான பாதையைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
தாய் அன்பை மறந்து கண் போன போக்கில் செல்கின்றனர். ஆனால் எந்தவொரு தாயும் பிள்ளைகளை வெறுப்பது இல்லை.
தனது அன்பால் அவர்களை நல்வழிப்படுத்துகிறாள். இதில் ஏழை, பணக்காரர் வித்தியாசம் இல்லை. உலகின் உண்மையான ஹீரோக்கள் தாய்மார்கள்.
தாய் அன்புக்கு உலகில் ஈடு இணை எதுவுமே இல்லை. தாயின் அன்பு இல்லாமல் உலகமே இல்லை. தாயின் அன்பை நினைவுகூர்ந்து இந்த புத்தாண்டில் நாம் அனைவரும் உலகம் முழுவதும் அன்பை பரப்ப வேண்டும்“ என தெரிவித்துள்ளார்.





