LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Tuesday, January 22, 2019

தமிழகத்தில் பாஜக – அதிமுக கூட்டணி அமையும் : ராம்தாஸ் அத்வாலே

தமிழகத்தில் பாஜக – அதிமுக கூட்டணி அமையும் என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் இன்று(செவ்வாய்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜகவும், அதிமுகவும் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கும். திமுக அதிக கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைக்கிறது.

அதனால், தமிழக மக்களுக்காக ஜெயலலிதா கண்ட கனவுகளை நிறைவேற்ற தினகரன் அதிமுவுடன் இணைய வேண்டும். தினகரன் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை அதிமுகவோடு இணைந்து சந்திக்க வேண்டும்.

ஓபிஎஸ்-இபிஎஸ் இணைந்தது போன்று இரு அணிகளும் இணைய வேண்டும் என்பது தொடர்பாக தினகரனை சந்தித்து வலியுறுத்த உள்ளேன்.

இணைந்த இரு அணிகளும் பாஜக கூட்டணியில் வரும் மக்களவைத் தேர்தலை சந்திக்கும்” என தெரிவித்துள்ளார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7