
பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக நம்முடைய பாரம்பரியத் தைக் காக்கும் புவிசார் குறியீடு பெற்றுள்ள பொருட்களைப் பயன் படுத்த வேண்டும் என்று அறிவுசார் சொத்துரிமை சங்கம் வலியுறுத்தி யுள்ளது.
இது தொடர்பாக சென்னை அறிவுசார் சொத்துரிமை அட்டர்னி சங்கத்தின் தலைவரும், உயர் நீதிமன்ற வழக்கறிஞருமான ப.சஞ்சய்காந்தி ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியதாவது:
இதுவரை ஈத்தாமொழி நெட்டை தென்னை, காஞ்சிபுரம் பட்டு, தஞ்சாவூர் ஓவியம், வீணை, பொம்மை, ஊட்டி தோடர் இன மக்களின் போர்வை, பத்தமடை பாய், கோவை கோரா காட்டன், மதுரை சுங்கடி சேலைகள், பவானி ஜமுக்காளம் உள்ளிட்ட 25-க் கும் மேற்பட்ட பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக தென்னை மரங்களில் இருந்து தட்டு, கயிறு போன்ற பொருட்களைத் தயாரிக்கலாம். அதேபோல மானாமதுரையில் கடம் தயாரிக்கப் பயன்படுத்தப் படும் களிமண் மூலமாக எளிதில் உடையாத வாட்டர் பாட்டிலும், அந்த பாட்டிலுக்கு தென்னை மர மூடியும், அதற்கு அழகு சேர்க்கும் விதத்தில் தோடர் இன மக்களின் அழகிய கைவேலைப்பாட்டுடன் கூடிய துணிப்பையும் வழங்கினால் பிளாஸ்டிக் பாட்டில் இருக்காது.
பத்தமடை பாய் மூலமாக பிளாஸ்டிக் பாய்களை ஒழித்து விடலாம். மொபைல் போன் களுக்கு பிளாஸ்டிக் கவர் போடு வதற்குப் பதிலாக அழகிய துணிப் பை உறை போட முடியும். இதேபோல சுங்கடி சேலைகளின் உபயோகத்தை அதிகரித்தால் சிந்தடிக் சேலைகளுக்கு வேலை இருக்காது. வீட்டை அலங்கரிக்கும் பிளாஸ்டிக் பொருட்களுக்குப் பதிலாக பாரம்பரிய சிற்பங்கள் மற்றும் கைவினைப் பொருட் களை பயன்படுத்தலாம். இப்படி நம்முடைய பாரம்பரிய பொருட் களை உபயோகப்படுத்தும் ஆர் வத்தை அதிகரித்தாலே மறுசுழற்சி செய்ய இயலாத பிளாஸ்டிக்கை முற்றிலுமாக ஒழித்துவிட முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.
