கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வெருகல் பிரதேச செயலகம் மற்றும் விவசாயிகள் இணைந்து நடாத்திய கிழக்கு மாகாண பொங்கல் விழா திருகோணமலை வெருகல் கருக்காமுனை பொது விளையாட்டு மைதானத்தில் வியாழக்கிழமை (24) இடம்பெற்றது.இதில் முதன்மை அதிதியாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.என்.ஏ.புஷ்பகுமார கலந்து சிறப்பித்தார்.
இதன்போது பொது அமைப்புக்கள், பொதுமக்களால் 108 பானைகள் வைத்து பொங்கல் இடம்பெற்றது.அத்தோடு தமிழர்களின் பாரம்பரியத்தினை எதிர்கால சந்ததியினருக்கு எடுத்துக் காட்டும் முகமாக இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.அ . அச்சுதன்






