LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, January 24, 2019

கூட்டு ஒப்பந்தங்களை இரத்துச்செய்து அரசாங்கத்திடம் பொறுப்பைக் கொடுங்கள் – வடிவேல் சுரேஸ்

கூட்டு ஒப்பந்தங்களை இரத்துச்செய்து பெருந்தோட்டங்களின் பொறுப்பை அரசாங்கத்திடம் வழங்குமாறு பெருந்தோட்ட தொழிற்சங்கங்களிடம் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

பெரும் வருமானங்களைப் பெற்றுக்கொள்ளக் கூடிய நடவடிக்கைகளை இந்தக் கம்பனிகள் நடத்திக்கொண்டிருக்கின்ற நிலையிலே, அவர்கள் நட்டமாக இயங்கிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அப்படியானால் இந்தக் கூட்டு ஒப்பந்தங்களை இரத்துச்செய்து தோட்டங்களின் பொறுப்பை அரசாங்கத்திடம் வழங்குமாறு நான் கோருகின்றேன் என்று குறிப்பிட்டுள்ள அவர், இவ்வாறு வழங்குமிடத்து நாம் தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கத்துடன் பேசி நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவித்தார்.


 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7