LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, January 24, 2019

ஊடகவியலாளர்கள் படுகொலைக்கு நீதி கோரும் போராட்டத்துக்கு அழைப்பு

ஊடகவியலாளர்கள் படுகொலைக்கு நீதிகோரி நடைபெறவுள்ள போராட்டத்துக்கு ஆதரவு வழங்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திருமலையில் வைத்து 2016 ஆம் ஆண்டு படுகொலையான ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 13 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழிலுள்ள படுகொலையான ஊடகவியலாளர்கள் நினைவுத் தூபி முன்றலில் வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

இதனை முன்னிட்டு, படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிகோரும் போராட்டம் அன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

யாழ். ஊடக மையத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெறவுள்ள இப்போராட்டத்தில் கிழக்கு ஊடக அமையம் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் ஊடக சுதந்திரத்திற்கான செயற்பாட்டுக்குழு, தொழில்சார் இணைய ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மன்னார், வவுனியா, முல்லைதீவு மற்றும் கிளிநொச்சி ஊடகவியலாளர் அமைப்புக்களும் இப்போராட்டத்தில் இணையவுள்ளன.

ஊடகப்படுகொலைக்கான நீதி கோரும் இப்போராட்டத்தில் அனைவரையும் திரண்டு நீதிக்காக குரல் கொடுக்குமாறு ஊடக அமைப்பு அழைப்புவிடுத்துள்ளன.

அம்பாறையில் பிறந்திருந்த ஊடகவியலாளர் சுகிர்தராஜன் திருமலையில் பணியாற்றிக்கொண்டிருந்த போது இலங்கை அதிரடிப்படைகளால் அரங்கேற்றப்பட்ட ஐந்து பாடசாலை மாணவர்களது படுகொலையினை அம்பலப்படுத்திய நிலையில் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தது தெரிந்ததே.


 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7