அஜித் நடிப்பில் விஸ்வாசம் திரைப்படம் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பு பெற்று வருகின்றது. இப்படத்திற்கு தமிழகம் முழுவதுமே சிறந்த வசூல் சாதனையை படைத்துள்ளது.இந்நிலையில் தற்போது தமிழகத்தில் மட்டும் 25 கோடி ரூபாய் வரை முதல் நாள் வசூல் செய்துள்ளதாக கூறியுள்ளனர்.
ரஜினியின் பேட்ட திரைப்படத்துடன் போட்டியிட்டே இத்தனை கோடி ரூபாயை விஸ்வாசம் வசூல் செய்துள்ளது என்ற விடயம் அனைவருக்கும் ஆச்சரியமாக உள்ளது.
தமிழ்நாட்டில் வெளியாகும் திரைப்படங்களில் முதல்மூன்று நாள் வசூலில் பெரும்பாலும் அஜித் படங்களுக்கே அதிக வசூல் கிடைப்பது வழக்கமாகும்.
மேலும், விஜய்யின் சர்கார் தனித்து வெளியாகியே முதல் நாள் 30 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





