ரஜினி நடிப்பில் ‘பேட்ட’ திரைப்படமும், அஜித் நடிப்பில் ‘விஸ்வாசம்’ திரைப்படமும் பொங்கல் விருந்தாக வெளியாகின.நேற்று உலகம் முழுவதும் வெளியான இந்த இரண்டு படங்களுக்குமிடையில் கடும் போட்டி நிலவுகின்ற நிலையில், இரு படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
இந்நிலையில் ‘பேட்ட’ உலகம் முழுவதும் முதல் நாளளில் ரூ.48 கோடி வசூல் செய்துள்ளது. அதேபோல் அஜித்தின் விஸ்வாசம் ரூ.43 கோடி வசூல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இவை இரண்டுமே வேலை நாட்களான நேற்று நல்ல வசூல் என்று கூறியுள்ளனர்.
இதேவேளை, தமிழ்நாட்டில் ‘பேட்ட’ சென்னை, திருச்சி, தஞ்சாவூர் பகுதிகளில் பெரும் வசூலைக் குவித்துள்ளதுடன் ஏனைய இடங்களில், குறிப்பாக தென் தமிழகம் முழுவதும் விஸ்வாசம் வசூலில் முன்னிலையாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.





