
இதற்கமைய சமஷ்டி பேரவை நிறைவேற்றிய வாகன போக்குவரத்து திருத்தச் சட்டங்கள் நாளை மற்றும் பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளன.
இதனடிப்படையில், மருத்துவப் பரிசோதனை, அடிப்படையான சாரதி பயிற்சி மற்றும் ஆபத்தான பொருட்களை எடுத்துச் செல்லல் தொடர்பில் திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
பெப்ரவரி முதலாம் திகதி முதல் புதிய சாரதிகள் அனைத்து வகையான வாகனங்களையும் ஓட்ட முடியும் என்பதே மிக முக்கியமான மாற்றமாகும். (Automaten-Fahrer dürfen ab Februar schalten)
சாரதி அனுமதிப்பத்திரத்தில் எந்த வரையறையும் உள்ளடக்கப்பட மாட்டாது. பழைய சாரதி அனுமதிப்பத்திரங்களை வைத்திருப்போர், போக்குவரத்து வரம்புகளை நீக்குவது தொடர்பில் வீதி போக்குவரத்து அலுவலகத்திற்கு விண்ணப்பிக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாளை முதல் மருத்துவ சோதனைக்கான வயது வரம்பு அமுலுக்கு வரவுள்ளது. 75 வயதிலிருந்து இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
