
2019ஆம் ஆண்டு புத்தாண்டானது நியுசிலாந்து மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகளில் பிறந்துள்ள நிலையில், கனேடியர்கள் புத்தாண்டை வரவேற்க தயாராகி வருகின்றனர்.
இந்தநிலையில் கனடாவின் முக்கிய நகரங்களில் உள்ள வணிக நிலையங்கள், இரவு விடுதிகள், முக்கிய உணவகங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அதிகளவான பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது தீவிரவாத தாக்குதல்கள் அல்லது அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படலாம் என்ற அச்சம் காரணமாகவே இவ்வாறு பாதுகாப்பு பலப்பகுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
