
இந்த ஆண்டில் தானா சேர்ந்த கூட்டம், நடிகையர் திலகம், சர்கார், சாமி ஸ்கொயர், சண்டைக்கோழி 2 ஆகிய படங்களில் காதாநாயகியாகவும் சீமராஜா படத்தில் கௌரவ வேடத்திலும் நடித்திருந்தார்.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இவ்வாறு அதிக படங்களை தந்தவர் என்ற பெருமையை தன் கைவசம் வைத்திருந்த நயன்தாரா இந்த வருடம் 2 படங்களை மாத்திரமே தந்துள்ளார்.
இந்த இரு படங்களிலும் அவர் முதன்மை வேடத்தில் நடித்துள்ளார்.
இதன் நிமித்தம் தன்னுடைய முதலிடத்தினை தக்கவைத்துக்கொள்ள நயன்தாரா தற்பொழுது முன்னணி கதாநாயகர்களின் திரைப்படங்களிலும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
