
இந்த கருவியை அவர்கள் Science Robotics எனும் சஞ்சிகையில் அறிமுகம் செய்துள்ளனர்.
கருவியின் விரல்கள் இயந்திரத்துடன் தனித்தனியே இணைக்கப்படாமல் மனிதர்கள் இயற்கையாக விரல்களை அசைப்பதைப் போன்றே அது பியானோவை வாசிக்கிறது.
பல நுணுக்கமான கூறுகளைக் கொண்ட இசையை இப்போது அதனால் வாசிக்க இயலாது. எளிய பாடல்களை மட்டுமே அது இசைத்துக் காட்டும் என்கின்றனர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பொறியியல் துறை ஆய்வாளர்கள்.
எனினும் இந்த ஆய்வு மனிதர்களின் இயற்கையான அசைவுகளைப் பிரதிபலிக்கும் கருவிகளை உருவாக்கும் முயற்சியை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என நம்பப்படுகின்றது.
