
கடும் பனிவு பொழிவு காரணமாக வீதிகளில் பனிகொட்டிக்கிடப்பதுடன், வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2019ஆம் ஆண்டு புத்தாண்டானது நியுசிலாந்து மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகளில் பிறந்துள்ள நிலையில், சீனர்களும் புத்தாண்டை வரவேற்க தயாராகி வருகின்றனர்.
இந்தநிலையில் பனிப்பொழிவு காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளமையினால் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
அத்துடன், ரயில் தண்டவாளங்களை மூடியுள்ள பனிக்கட்டிகள் காரணமாக அதிகவேக ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
