பிரித்தானிய இளவரசர் சார்லஸின் ஞான மகன் என்று அழைக்கப்படும் உறவினர் ஒருவர், ஒரு கடல் கன்னியை திருமணம் முடிக்கவிருப்பதாக அரச குடும்ப தரப்பில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.Mountbatten பிரபுவின் 100 மில்லியன் பவுண்டுகளுக்கு வாரிசான Nicholas Knatchbull என்பவர் Ambre Saint-Clare என்னும் பெண்ணை திருமணம் செய்து கொள்ளவுள்ளார்.
Ambre Saint என்ற பெண் நாடகம் மற்றும் திரைப்படங்களில் கடல் கன்னியாக நடிப்பதில் புகழ் பெற்றவராவார். இந்தநிலையில், கிறிஸ்மஸ் தினத்தன்று இருவருக்கும் நிச்சயதார்த்த நிகழ்வு இடம்பெற்றதாக மணப்பெண்ணான Ambre தெரிவித்துள்ளார்.
Nicholas சின் தந்தையான Earl Mountbatten னின் ஞானத்தந்தை இளவரசர் பிலிப் ஆவார். அதேபோன்று Earl Mountbatten இளவரசர் வில்லியமின் ஞானத்தந்தை என்பதுடன் Nicholas இன் ஞானத்தந்தை இளவரசர் சார்லஸ் ஆவார்.
Nicholas க்கு ஏற்கனவே மூன்று முறை திருமணம் நிச்சயமாகி தடைப்பட்ட நிலையில், இந்த கடல் கன்னி அவரை நிச்சயம் திருமணம் செய்து கொள்வார் என்று அவரது நண்பர்கள் உறுதியாக கூறியுள்ளனர்.
குறிப்பு :- ஞானமகன் (Godson) = ஞானஸ்நானத்தின் போது குழந்தையாக எடுத்துக் கொள்ளப்பட்ட ஆண் குழந்தை.





