தன்னை பாலியல் வன்முறைக்கு உட்படுத்த முயன்ற ஒருவரை கொலை செய்த பெண்ணொருவர் பிரித்தானியாவில் மேயர் பதவிக்கு போட்டியிடும் ஒருவரின் மனைவியாக போவதால் பிரபலமடையவுள்ளார்.பாலியல் வன்முறைக்கு முயன்ற நபரின் நண்பர்களை வைத்தே அந்த மனிதரை கொலை செய்த குறித்த பெண் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்டீல் மஹில் என்ற பெண் சீக்கியரான ககான்தீப் சிங் (21) என்ற தொலைக்காட்சி பணியாளரை விருந்தக அறைக்கு வரவழைத்து இந்த கொலை சம்பவத்தை மேற்கொண்டிருப்பதாக தொிவிக்கப்படுகிறது.
முன்னர் தன்னை பாலியல் ரீதியாக தாக்கிய அவரை முன்டீல் நயவஞ்சகமாக ஏமாற்றி வரவழைக்க, அவரது அறையில் மறைந்திருந்த ஹாவிந்தர் சொக்கர் என்னும் சீக்கியரும்,டர்ரன் பீட்டர்ஸ் என்ற நபரும் தலையில் அடித்து மின்சார வடத்தினால் கட்டி ககான்தீப்பின் காரின் பின்பக்கத்திலேயே அடைத்து தீயிட்டுக் கொளுத்தி கொலை செய்தனர்.
இந்த சம்பவத்திற்காக கைது செய்யப்பட்ட முன்டீல் ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்தாலும் பின்னர் மூன்று ஆண்டுகளில் விடுதலை செய்யப்பட்டார்.
இந்தநிலையில் வரிந்தர் சிங் போலா என்பவர் லண்டனில் உள்ள ஒரு சிறிய நகரம் ஒன்றில் மேயராக தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.
அவரை திருமணம் செய்து கொள்ளவுள்ள முவுன்டீல், ஒரு மேயரின் மனைவியாக மரியாதைக்குரிய ஒரு நபராக மாறவுள்ளார்.







