
ம் புதிய மாவட்ட நிருவாகத் தெரிவும் இன்று (27) ஞாயிற்றுக் கிழமை திருகோணமலை செஞ்சிலுவை சங்க அலுவலகத்தில் கிளை நிறைவேற்று அதிகாரி எஸ்.சுஜீவன் தலைமையில் இடம் பெற்றது.
பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடாத்தப்பட்ட டெங்கு விழிப்புணர்வு நாடக போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவ மாணவிகளுக்கான பரிசில்களும் இதன் போது வழங்கி வைக்கப்பட்டன .
பாடசாலை மாணவிகளின் டெங்கு விழிப்புணர்வு தொடர்பிலான மேடை நாடகங்களும் அரங்கேற்றப்பட்டன.
புதிய நிருவாக சபை தெரிவு இதன் போது தேர்தல் சபை குழாத்தினரால் ஏகமானதாக தெரிவு செய்யப்பட்டன.

இவ் நிகழ்வில் திருகோணமலை செஞ்சிலுவை சங்க மாவட்ட கிளை முன்னால் கிளை நிறைவேற்று அதிகாரி டாக்டர் என்.
ரவிச்சந்திரன்,திருகோணமலை மாவட்ட கௌரவ தலைவர் வீ.முரளிதரன்,முன்னால் செஞ்சிலுவை சங்க திருகோணமலை மாவட்ட தலைவரும் தற்போதைய திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை தலைவருமான வைத்திய கலாநிதி ஈ.ஜீ.ஜானகுணாளன் உட்பட இளைஞர் தொண்டர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
(அ . அச்சுதன்)
