
வவுனியா, சாம்பல்தோட்டம் கிராமத்தில் அமைக்கப்பட்ட மலைமகள் விளையாட்டுக் கழகத்திற்கான கட்டடம் ஒன்றைத் திறந்து வைத்து உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“புதிய கட்சி பற்றியும், புதிய தலைமைத்துவம் பற்றியும் பலர் இன்று பேசுகிறார்கள். வடக்கு கிழக்கில் கூட்டமைப்பை விட வேறு தலைமைகள் இருக்கிறதா? இருந்தால் அவர்களை அடையாளம் காட்டுங்கள்.
அண்மையில் பிரதமருடனான சந்திப்பில் பல அபிவிருத்தி விடயங்கள் பற்றி பேசப்பட்டது. தொல்பொருட் திணைக்களம் ஒரு மதத்தில் மாத்திரம் கரிசனை கொள்வதுடன் ஏனைய மதங்களை அழிக்கும் நோக்கில் செயற்படுவது தொடர்பாக அவரிடம் எடுத்துக் கூறினோம்.
குறிப்பாக வவுனியா, முல்லைதீவு மாவட்டங்களில் அதன் செயற்பாட்டை அவதானிக்க முடியும். அதற்கு எவ்வாறான தீர்மானம் எடுக்கலாம் என்று பிரதமரை கேட்டிருந்தோம்.
அத்துடன், வவுனியா வெடுக்குநாரிமலை, குருந்தூர் மலை, நீராவியடி பிள்ளையார் ஆலயம் என்பன இந்துக்களின் பூர்விக பிரதேசங்கள் அங்கு இந்துக்களின் அடையாளங்களை அழித்து பௌத்த சின்னங்களை நிறுவும் செயற்பாட்டிற்கு தொல்பொருட் திணைக்களம் உடந்தையாக இருக்கிறது என்பதையும் எடுத்துக் கூறியிருக்கின்றோம்.
இவ்வாறான விடயங்களை கூட்டமைப்பு மாத்திரமே தற்போது கதைத்து வருகின்றது. வன்னியின் மூன்று மாவட்டங்களும் தற்போது அச்சுறுத்தல்களிற்கு உள்ளாகியுள்ளது.
எதிர்காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவ்விடயங்கள் குறித்து அரசாங்கத்திற்கு முன்வைப்பதற்கான பல தீர்மானங்களை முன்னெடுக்கவுள்ளது” என அவர் மேலும் குறிப்பிட்டார்.
