
குறித்த சம்பவம் நேற்றிரவு (சனிக்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
குறித்த அலுவலகத்தில் இரவு யாரும் இல்லாத சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனால் அலுவலகத்தில் முன் கதவு கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளதுடன், அலுவலகத்தின் சில பகுதிகள் சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் தமிழர் விடுதலைக் கூட்டணி தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சிப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
