தெற்கு எட்மண்டன் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம், தெற்கு எட்மண்டன் Crabapple Crescen பகுதியில் நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்றுள்ளது.
இதன்போது 20 வயதான இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் வழங்கு பதிவு செய்துள்ள பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அண்மைக்காலமாகவே எட்மண்டன் பகுதியில் இவ்வாறான துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.





