கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் எப். சீ. ராகல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.கிழக்கு பல்கலைக்கழத்தின் தற்போதைய உபவேந்தர் கலாநிதி தங்கமுத்து ஜயசிங்கத்தின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ளதையடுத்தே இந்நியமனம் இடம்பெற்றுள்ளது.
புதிய உபவேந்தரைத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு கடந்த மாதம் முதலாம் திகதி இடம்பெற்றிருந்தது.
பல்கலைக்கழக பேரவை உறுப்பினர்களிடையே நடாத்தப்பட்ட வாக்கெடுப்பின் முடிவில் பேராசிரியர் எவ். சீ. ராகல் முதனிலையிலும், கலாநிதி எம். சந்திரகாந்தா இரண்டாவதாகவும், திருமலை வளாக முதல்வர் பேராசிரியர் ரி. கனகசிங்கம் மூன்றாவதாகவும் இடம்பிடித்திருந்தனர்.
பேரவையின் பரிந்துரை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. பல்கலைக்கழகங்கள் சட்டத்துக்கமைவாக பேரவையினால் தெரிவு செய்யப்பட்டவர்களின் விவரங்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
அதனடிப்படையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக ஜனவரி 22 ஆம் திகதி முதல் பேராசிரியர் எவ். சீ. ராகலை நியமனம் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.





