
ஆஞ்சநேயர் ஜெயந்திவிழா கிரியைகள் யாவும் சர்வமத சபை இந்து மதகுரு சிவஸ்ரீ ஜெயதீஸ்வர குருக்கள் தலைமையில் நடைபெறும்.
சனிக்கிழமை காலை 10 மணிக்கு 108 சங்கு அபிசேகம், விசேட தீப ஆராதனை, யாக பூஜை, அபிசேகம், அதனைத்தொடர்ந்து அன்னதானமும் நடைபெறவுள்ளன.
விசேடமாக நடைபெறும் இவ் ஆஞ்சநேயர் ஜெயந்திவிழாவிற்கு அனைவரும் வருகை தந்து இறை அருள் பெற்றுக்கொள்ளுமாறு ஆலயத்தின் பரிபால சபையினர் கேட்டுக்கொள்கின்றனர்.
