நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்காக அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையை தயாரிக்க குழுவொன்றினை அமைத்துள்ளது.தொகுதி பங்கீடு மற்றும் தேர்தலுக்காக மேற்கொள்ள வேண்டிய ஏனைய நடவடிக்கைகள் தொடர்பில் இக்குழுவில் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த குழுவில் அ.தி.மு.க. உறுப்பினர்களான கே.பி.முனிசாமி, வைத்திலிங்கம், தங்கமணி, வேலுமணி, ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.
இதேவேளை, நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்காக தமிழகத்திலுள்ள ஏனைய கட்சிகளும் தயாராகி வருகின்றன.
மேலும் மக்களிடம் ஆதரவை திரட்டும் பொருட்டும் அதிகளவான மக்கள் சந்திப்பில், அனைத்து கட்சிகளும் ஈடுபட்டு வருவதாக இந்திய ஊடகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.





