நேரடி அரசியலில் குதித்துள்ள சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தியின் வருகையை பாஜகவின் கூட்டணிக் கட்சியான சிவசேனா வரவேற்றுள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாவின் மகளும் கட்சியின் தலைவர் ராகுலின் சகோதரியுமான பிரியங்கா தீவிர அரசியலில் ஈடுபடாமல் இருந்து வந்தார். சோனியா, ராகுல் ஆகியோரின் தொகுதிகளான ரேபரேலி, அமேதியில் மட்டும் தேர்தல் பிரச்சாரம் செய்தார். தீவிர அரசியலுக்கு பிரியங்கா வரவேண்டும் என்று காங்கிரஸார் வலியுறுத்திய போதும் அவர் அதை ஏற்கவில்லை.
இதனிடையே பிரியங்காவை அகில இந்திய காங்கிரஸின் பொதுச் செயலாளராக கட்சித் தலைவர் ராகுல் காந்தி நியமித்துள்ளார். இதன் மூலம் தீவிர அரசியலுக்கு பிரியங்கா வந்துள்ளார்.
இந்நிலையில் நேரடி அரசியலில் குதித்துள்ள பிரியங்கா காந்தியின் வருகையை பாஜகவின் கூட்டணிக் கட்சியான சிவசேனா வரவேற்றுள்ளது.
இதுகுறித்துப் பேசிய சிவசேனா கட்சியின் செய்தித் தொடர்பாளர் மனிஷா கயாண்டே, ''பிரியங்கா காந்தியின் சிறந்த ஆளுமையால், காங்கிரஸ் பயனடையும். பிரியங்கா தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் விதம், வாக்காளர்களின் மனதைக் கவரும் அவரின் திறன் ஆகியவை காங்கிரஸ் கட்சிக்குக் கைகொடுக்கும்.
பிரியங்கா தன்னுடைய பாட்டி இந்திரா காந்தியின் பண்புகளைக் கொண்டிருக்கிறார். மக்கள் அவரின் உருவில் இந்திராவைக் காண்பர். இது வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு மக்கள் வாக்களிக்க உதவும்'' என்று தெரிவித்தார்.
அதிருப்தி சிவசேனா
2014 பொதுத் தேர்தலில் மகாராஷ்டிராவில் பாஜகவும் சிவசேனாவும் தனித்தனியாகப் போட்டியிட்டன. சிவசேனா கூட்டணியுடன் அங்கு ஆட்சி அமைத்தது பாஜக.
ஆனால் சிவசேனாவுக்கு அமைச்சரவைப் பதவி எதையும் பாஜக அளிக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த சிவசேனா தொடர்ந்து பாஜகவையும் மத்திய அரசையும் விமர்சித்து வருகிறது.
Attachments area