LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, January 24, 2019

அதிமுகவுடன் இணைப்பு இல்லை: திருச்சியில் தினகரன் திட்டவட்டம்

திருச்சியில் திருமண விழாவில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தி யாளர்களிடம் கூறியது: அதிமுகவுடன் இணைய வேண்டும் என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தனது ஆசையைக் கூறியிருக்கிறார். ஆனால், அதிமுகவுடன் இணையமாட்டோம். துரோக சக்தியிடமிருந்து விலகி வந்து விட்டோம். எங்கள் கட்சியில் தொகுதிக்கு 3,000 நிர்வாகிகள் வீதம் நியமித்து உள்ளோம். தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடி உறுப்பினர்கள் எங்கள் கட்சியில் இணைந்துள்ளனர். எனவே, அதிமுகவுடன் அமமுக சேர்வதற்கான வாய்ப்பே இல்லை. அதற்கான முயற்சிகளும் நடைபெறவில்லை. அதேவேளையில், எம்ஜிஆர் உருவாக்கிய இயக்கத்தின் பெயர், சின்னத்தை மீட்பதே எங்கள் இலக்கு என்றார்.
தொடர்ந்து, கரூரில் அவர் பேசும்போது, ”முதல்வரை சிக்கலில் மாட்டிவிடுவதற்காக தம்பிதுரை பாஜகவை எதிர்த்துப் பேசுகிறார் என நினைத்தேன். ஆனால், அவர்கள் இருவரும் சேர்ந்துதான் இப்படி செயல்படுகிறார்கள் என தற்போது தெரிகிறது” என்றார்.



 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7