LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+7°C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, January 5, 2019

தமிழ் தேசத்தின் அங்கீகாரத்திற்காக தொடர்ந்து போராடவேண்டும் – கஜேந்திரன்

தமிழ்தேசத்தின் அங்கீகாரத்திற்காக தொடர்ந்து போராட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முண்ணியின் பொதுச்செயலாளர் செ.கஜேந்திரன் தெரிவித்தார்.

வவுனியா, கனராயன்குளத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் நினைவு நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தாார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழர்களுக்கான அடையாளம் ஒன்றை ஏற்படுத்துவதில் முன்னின்று செயற்பட்டவர்களுள் குமார் பொன்னம்பலமும் ஒருவர்.

தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் தமிழ் தேசத்தின் அங்கீகாரத்தை வேண்டி நகர்ந்தவேளையிலே அப்போராட்டத்தின் நியாயப்பாடுகளை  சர்வதேசஅரங்கு வரை எடுத்துசென்றதில் பெரும் பங்காற்றியவர்.

அவரது தியாகத்திற்கு மதிப்பளித்து தேசியத் தலைவர் ‘மாமனிதர்’ என்ற அதியுயர் கௌரவத்தை வழங்கியிருந்தார்.

அவர் எந்த இலட்சியத்திற்காக உயிர் துறந்தாரோ அந்த அடிப்படையில் வடக்கு கிழக்கு இணைந்த தாயகத்திலே சுயநிர்ணய அடிப்படையில் எங்களுக்கான அரசியல் தீர்வைப் பெறுவதற்காக நாம் தொடர்ந்து பயணிக்கவேண்டும்.

ஒற்றையாட்சியை நாம் நிராகரிக்கவேண்டும். ஏக்கியராட்சியை நாம் நிராகரிக்கவேண்டும். பௌத்தம் அரச மதம் என்பதை நாம் நிராகரிக்கவேண்டும்.

எமது தேசத்தின் அங்கீகாரத்திற்காக தொடர்ந்து போராடவேண்டும். அதற்காக எமது உயிர் மூச்சுள்ளவரை நேர்மையாகவும் அர்ப்பணிப்பாகவும் பயணிப்போம்” என்று தெரிவித்தார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7