எட்மண்டனில் அமைக்கப்பட்டுள்ள பனி கோட்டைகளை பார்வையிட, பெருமளவான மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.நான்காவது ஆண்டும் தொடர்ச்சியாக அமைக்கப்பட்டுள்ள குறித்த பனி கோட்டைகள், கடந்த ஆண்டை விட பெரிதாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பனி கோட்டைகள், நேற்று (வெள்ளிக்கிழமை) மக்களின் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளது.
இந்த பனி கோட்டைகளை உருவாக்கிய தள நிர்வாகி மற்றும் முன்னணி கலைஞர் கிறிஸ்டியன் டெனிஸ், இந்த ஆண்டு அமைப்பானது முந்தைய ஆண்டுகளை விட அதிக வளைவுகளுடன் மிக உயரமானதாக அமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தீர்த்துள்ள குறித்த பனி கோட்டைகள், பல நிற ஒளி விளக்குகளுடன் காட்சியளிப்பதோடு, சிறார்களுக்கான பொழுதுபோக்கு இடமாகவும் மாறியுள்ளது.





