LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+7°C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, January 5, 2019

வடக்கு கிழக்கில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் – ஹெரிசன்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று (சனிக்கிழமை) நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.

அவர் அங்கு குறிப்பிடுகையில், “இராணுவத்தினரிடம் உள்ள காணிகள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்படுகின்றது. எதிர்காலத்திலும் விடுவிக்கப்படும்.

அதேபோல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பெற்றுள்ள நுண் கடன்கள் பற்றி ஆராய்ந்து வருகின்றோம். அவ்வாறான கடன்களை இரத்துச்செய்வதாக என்னால் உறுதியளிக்க முடியாது ஆனால் அவர்களுக்கு எவ்வாறான நன்மைகளை பெற்றுக்கொடுக்கலாம் என்பதை ஆராய்கின்றோம்.

அவர்கள் எந்த நடைமுறையில் அந்த கடன்களை பெற்றுள்ளார்கள் என்பதை பார்த்து அந்த செயற்பாடு முன்னெடுக்கப்படும்.

இதேவேளை, கிளிநொச்சி மாங்குளம் பகுதியில் பொருளாதார மையம் அமைக்கப்படவுள்ளது“ என்று தெரிவித்தார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7