LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, January 30, 2019

வாகரை மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்

வாகரை பிரதேசத்தில் கனிய மண் அகழ்வு  தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தினை நிறுத்துமாறு வலியுறுத்தி நேற்று புதன் கிழமை காலை பிரதேச மக்களால்  வாகரை பிரதேச செயலகத்திற்கு முன்பாக வீதியில் நின்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கதிரவெளி பிரதேச பொதுமக்கள் மற்றும் சமூக மட்டஅமைப்புக்களால் இவ் கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களான பால்சேனை வடக்கு தொடக்கம் வெருகல் வரையான கதிரவெளி,புதூர்,புச்சாக்கேணி,ஆகிய கிராமங்களை உள்ளடக்கியதாக கனிய மணல் அகழ்வு மற்றும் தொழிற்சாலை அமைக்கும் ஆரம்ப வேலைகள் அண்மையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இது;தொடர்பாக தமக்கு எந்த விதமான தெளிவூட்டல்களும் இல்லையென்றும். இவ் தொழிற்சாலை அமைப்பதனால் சூழல்பாதிப்பு, பௌதீக சூழலான  நீர்ச் சூழல், நிலச் சூழல்,வளிச் சூழல், பாதிப்படைவதாகவும், கடல் வளம் பாதிப்படையும் என்றும் நிலத்தடி நீர் பாதிப்பிற்குள்ளாகி எமது எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கை பாதிப்படையும் என்றும் தெரிவிக்கின்றனர். 

இதன் போது அரச அதிகாரிகளே,அரசியல்வாதிகளே,எமது பிரதேச மக்களை பாதிக்க கூடிய கனிய மணல்(இல்மனைட்) அகழ்வு பணியினை உடனடியாக தடுத்து  நிறுத்தங்கள்.எமது தாய் மண் எங்களை வாழ வைக்கும் மண். எங்களுக்கு சோறு போடும் மண்,விற்காதே விற்க்காதே தாய் மண்ணை விற்க்காதே.இல்மனைட் கம்பனியை தடை செய்,சுரண்டாதே சுரண்டாதே எங்களின் வளத்தை சுரண்டாதே என்பன போன்ற வாசகங்களை எழுதிய பதாதைகளை கையில் ஏந்தியவாறு திருமலை மட்டக்களப்பு வீதியில் கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது கோரிக்கை அடங்கிய மகஜர்களை பாராளுமன்ற உறுப்பினர்களான.சீ.யோகேஸ்வரன்,எஸ்.வியாழேந்திரன்,பிரதேச சபை தவிசாளர் சி.கோணலிங்கம்,பிரதேச செயலாளர்.எஸ் ஹரன்.மற்றும் வாகரை பொலிஸ் அதிகாரியிடம் கையளித்தனர். மகஜரை பெற்றுக்கொண்ட மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூடட்டமைப்பு  பாராளுமன்ற உறுப்பினர். சி.யோகேஸ்வரன், இது தொடர்பாக பாராளுமன்றத்தில் உரையாற்றவுள்ளதாகவும் இல்மனைட் மணல் எடுப்பதனால் கதிரவெளி,புச்சாக்கேணி,பால்சேனை,புதூர்.போன்ற பிரதேச மக்களின் வாழ்வில் பாதிப்பு ஏற்படும் .அரசியல்வாதிகளாக இருக்கலாம்,அரச அதிகாரிகளாக இருக்கலாம் இவ்விடயத்திற்க்காக லஞ்சம் வாங்கினால் ஆதாரத்துடன் தன்னிடம் சமர்பித்தால் தகுந்த நடவடிக்கை எடுப்பேன் என்றும் அத்துடன் மிக விரைவாக சமுக நல வழக்கு தொடர்ந்து இவ் செயற் தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தினை நிறுத்த நடவடிக்கை எடுப்பேன் என்று இதன்போது கருத்து தெரிவித்தார்.

பாண்டி 


 







 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7