நிதின் கட்காரியைப் பிரதமர் வேட்பாளராக நிறுத்தினால் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக சிவசேனா கட்சி அறிவித்துள்ளது.மத்தியிலும், மராட்டியத்தியிலும் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி ஆட்சியில் இருக்கும் சிவசேனா நரேந்திர மோடி உள்ளிட்ட பா.ஜ.க. வினை கடுமையாக விமர்சித்து வருகின்றது.
ராமர் கோவில் விவகாரம், ரபேல் விவகாரங்களில் வெளிப்படையாகவே தனது எதிர்ப்பினை சிவசேனா கட்சி தெரிவித்து வருகின்றது. இந்நிலையிலேயே சிவசேனா தற்போது இவ்வாறான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றது.
இதேவேளை சிவசேனாவின் இக்கருத்திற்கு மத்தியில் தனியாகப் போட்டியிடவும் தயாராக வேண்டும் என பாரதிய ஜனதா தொண்டர்களுக்கு அமித்ஷா அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது





