ரஷியாவில் உளவு பார்த்த குற்றச்சாட்டில் அமெரிக்காவை சேர்ந்த பௌல் வீலன் என்பவர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், தங்கள் நாட்டை சேர்ந்த ஒருவரை ரஷியா கைது செய்திருப்பதாக கனடா தெரிவித்துள்ளது.ரஷியாவின் தலைநகரான மொஸ்கோவில் அமெரிக்காவுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் அமெரிக்கரான பால் வெலான் என்பவரை ரஷிய நாட்டின் ரகசிய பொலிஸார் கடந்த 28-ம் திகதி கைது செய்ததாக செய்தி வெளியாகியிருந்தது.
கனடாவில் பிறந்தவரும் அமெரிக்கா, பிரித்தானிய மற்றும் ஐரிஷ் குடியுரிமை பெற்ற நபரே மொஸ்க்கோவில் உளவு நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே தங்கள் நாட்டை சேர்ந்த ஒருவரை ரஷியா கைது செய்திருப்பதாக கனடா தெரிவித்துள்ளது.





