
இவர் புத்தாண்டு தினமான இன்று(செவ்வாய்கிழமை) பதவி பிரமானம் செய்து கொண்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரேஸிலில் கடந்த ஒக்டோபர் மாதம் 28 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது.
இதில், இடதுசாரி தொழிலாளர் கட்சியின் பெர்ணான்டோ ஹட்டாட்டை எதிர்கொண்ட 63 வயதான ஜெய்ர் பொல்சொனாரோ, சிறு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இதேவேளை, ஊழலை ஒழிப்பதாகவும் நாட்டில் குற்றங்களை இல்லாதொழிப்பதாகவும் பொல்சொனாரோ தமது தேர்தல் பிரசாரங்களில் உறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
