
அவ்வாறு பணிக்கு வரத்தவறினால், ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் எச்சரித்துள்ளது.
குறித்த அறிக்கையில், “போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் அனைவரும் நாளைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும். நாளைக்குள் பணிக்குத் திரும்பும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது.
அவர்கள் ஏற்கனவே பணிபுரிந்த பள்ளிகளில் பணியை தொடரலாம். ஆனால் பணிக்கு வரத்தவறினால் புதிய இடத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.
ஜனவரி 28 ஆம் திகதிக்குப் பின்னர் தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படவுள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் கடந்த 22 ஆம் திகதி முதல் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது.
இப்போராட்டம் இன்று 6 ஆவது நாளாக தொடர்கின்றது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பெரும்பாலான ஊர்களில் தொடக்கப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வேலைக்கு வராததால் மாணவர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
