
நுவரெலியா இந்து கலாசார பேரவையின் பொங்கல் விழா நேற்று (சனிக்கிழமை) நுவரெலியா ஹாவேலியா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “அண்மையில் நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் விசேட கலந்துரையாடல் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நானும் அமைச்சர் மனோ கணேசனும் கலந்து கொண்டோம்.
எங்களை தவிர வேறு மதங்களை பிரதிநதித்துவம் செய்கின்ற வகையில் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள்.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்றத்திற்கு மிக விரைவில் ஞாயிற்றுக்கிழமைகளில் விசேட வகுப்புகளை நடத்துவதை தடை செய்யும் வகையில் சட்டம் ஒன்றை கொண்டு வருவதற்கு கூட்டத்தில் கலந்து கண்ட அனைவரும் ஏகமனதாக தீர்மானித்தனர்.
எங்களுடைய எதிர்கால சமூகத்தை சிறந்த ஒரு சமூகமாக உருவாக்க வேண்டும். எனவே அனைவரும் இணைந்து இந்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.
