LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, January 24, 2019

அதிகாரங்களைப் பகிர்ந்துகொடுக்க அரசியல்வாதிகள் அஞ்சுகின்றனர் – சம்பந்தன்

அரசியல்வாதிகள் மக்களிடம் அதிகாரங்களைப் பகிர்ந்து கொடுப்பதற்கு அஞ்சுவதாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான ஜப்பானிய மற்றும் அவுஸ்ரேலியத் தூதுவர்களை இன்று (வியாழக்கிழமை) கொழும்பில் சந்தித்தபோதே அவர் இதனை எடுத்துக்கூறியுள்ளார்.

இலங்கைக்கான அவுஸ்ரேலியத் தூதுவராக கடமையாற்றி தனது சேவைக் காலத்தை நிறைவுசெய்து செல்லும் பிரைஸ் ஹட்ச்ஸ்ன் இன்று சம்பந்தனை சந்தித்துள்ளார். அதேபோல், இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் அகிரா சுகியமாவும் கூட்டமைப்பின் தலைவரை சந்தித்துப் பேசியுள்ளார்.

இந்த சந்திப்புகளில் சமகால அரசியல் விடயங்கள் மற்றும் புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் உள்ளிட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளன. குறிப்பாக புதிய அரசியல் யாப்பு உருவாக்கத்தில் இரண்டு பிரதான கட்சிகள் காட்டும் அக்கறை போதுமானதாக இல்லை என கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், ஜனாதிபதியும், பிரதமரும் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், இரண்டு பெருன்பான்மை கட்சிகளும் புதிய அரசியல் யாப்பின் உள்ளடக்கம் மற்றும் நோக்கங்கள் குறித்து தமது மக்களுக்கு தெளிவுபடுத்துவதில் அக்கறையின்றி செயற்படுவதாகவும் அவர் எடுத்துரைத்துள்ளார்.

அதிகார பரவலாக்கம் நேர்மையானதாகவும் மக்கள் தமது நாளாந்த நடவடிக்கைகள் தொடர்பில் அதிகாரங்களை உபயோகிக்க கூடிய வகையில் இருத்தல் அவசியம் எனவும் சம்பந்தன் கூறியதாக கூட்டமைப்பின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.



 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7