“போதையிலிருந்து விடுபட்ட நாடு” என்னும் செயற்திட்டம் நாடு பூராகவும் உள்ள பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.அந்த வகையில் புத்தளம் கல்வி வலயத்திற்குட்பட்ட ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலயத்தில் மாணவ மாணவிகளால் போதை ஒழிப்பு ஊர்வலம் முன்னெடுக்கப்பட்டது.
நேற்று (வியாழக்கிழமை) மாலை நடைபெற்ற இந்த ஊர்வலத்தில், உடப்பு பொலிஸார், ஆசிரியர்கள், பெற்றோர் கலந்துகொண்டனர்.
இந்த ‘போதையிலிருந்து விடுபட்ட நாடு’ செயற்றிட்டம் ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கமைய முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.





