LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, January 28, 2019

இனவாதிகளை மட்டுமே மக்கள் எதிர்ப்பார்கள். கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் ஜெ.ஜெனார்த்தனன்.

கிழக்கு மாகாணத்தின் கௌரவ ஆளுனராக கலாநிதி கிஸ்புல்லா அவர்கள் அதிமேதகு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டதிலிருந்து கிழக்குமாகாணத்தின் பல பாகங்களிலும் கௌரவ ஆளுனருக்கு எதிரான கருத்துக்களும் கடையடைப்புகளும் இடம்பெற்றவண்ணமேயுள்ளன. பல்வேறு சிவில் அமைப்புக்கள், எல்லாளன்சமூக அமைப்புக்கள் மற்றும் வர்த்தக அமைப்புகள் தொடர்ச்சியான எதிர்ப்பினை வெளிக்காட்டிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் கிழக்கு மாகாணத்துக்கு பொதுவான ஒரு பதவியில் இருப்பவரை குறித்த ஒரு அரசியல் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக நியமித்திருப்பது ஆளுனர் மேலிருந்த குறைந்த பட்சநம்பிக்கையும் இல்லாமல் செய்திருக்கிறது.என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜெ.ஜெனார்த்தனன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் இன்று (28) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.அவர் தொடர்ந்து  தனது ஊடக அறிக்கையின் மூலம் இவ்வாறு தெரிவிக்கின்றார்.

 இச் செயல் போன்ற எதேச்சதிகாரமான செயல்களுக்கு அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் தொடர்ந்தும் துணைநிற்பது கிழக்கு தமிழர் மனதை வேதனை கொள்ளச்செய்கிறது. ஒருமாகாணத்தின் ஆளுனர் குறித்த கட்சியின் மாவட்ட அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டமை தமிழ் மக்கள் அதிமேதகு ஜனாதிபதியின் மேல் கொண்டிருந்த நல்லெண்ணத்தை கேள்விக்குரியதாக்கியுள்ளது. குறித்த ஒரு கட்சி சார்ந்த வேலைகளை செய்வதற்கும் அதே கட்சியினை வளர்ப்பதற்குமா கிழக்கு மாகாண ஆளுனர் நியமனம் அதிமேதகு ஜனாதிபதியினால் வழங்கப்பட்டது? என்ற கேள்வி எம் எல்லோர் மனதிலும் எழுகிறது.

கிழக்கில் தமிழர் ஆளுனராக நியமனம் பெற்றிருந்தால் முஸ்லிம்களும் எதிர்ப்பு தெரிவித்திருப்பார்கள் என்ற கௌரவ ஆளுனர் அவர்களின் செய்தி பத்திரிகையில் வாசிக்கக் கிடைத்தது. அவரின் கூற்று முற்று முழுதாக மறுக்கப்படக்கூடியது.கிழக்கில் முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட்டார் என்ற ஒரே காரணத்தால் தமிழ் மக்கள் எதிர்க்கவில்லை. கடந்த காலங்களில் இனவாதக்கருத்தை கக்கிய ஒருவர் என்பதாலும் இனவாத செயல்களில் ஈடுபட்டவர் என்று நம்பப்படுவதாலுமே கிழக்கில் தமிழர் முஸ்லிம் ஒற்றுமைக்கு பங்கம் வந்துவிடுமோ என்று அஞ்சியே மக்கள் புதிய ஆளுனர்மேல் விருப்பமின்மையை தெரிவிக்கிறார்கள். அதே போல இனவாத கருத்துக்களை விதைக்காத தமிழர் ஒருவர் ஆளுனராக நியமிக்கப்பட்டிருந்தால் தமிழர்களோடு சேர்ந்து முஸ்லிம் மக்களும் அவரை வரவேற்று இருப்பார்கள்.

வடக்கிலே ஆளுனராக நியமித்த தமிழரை எந்த முஸ்லிமும் எதிர்க்கவில்லை அதே போல மேல்மாகாணத்தில் நியமித்த முஸ்லிம் ஆளுனரையும் யாரும் எதிர்க்கவில்லை. எதிர்ப்புகள் வருகின்றதென்றால் காரணத்தை அறிந்து அதை இல்லாமல் ஆக்குவதுதான் சிறந்தது. தமிழர்களை தான்; ஓரங்கட்டவில்லை அவர்களும் சமமாக நடத்தப்படுகிறார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த கிழக்கின் கௌரவ ஆளுனர் முயற்சி செய்யவேண்டும்.என கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் ஜெ.ஜெனார்த்தனன் தனது ஊடக அறிக்கையில் தெரிவிக்கின்றார்.

அ . அச்சுதன்



 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7