(ர.தர்ஷா)
பொதுமக்களுக்கான சேவைகளை வழங்குகின்ற அரச திணைக்களங்கள் உள்ளிட்ட வைதியசாலைகள், நூலகங்கள் மற்றும் பாடசாலைகள் ஆகியவற்றின் விளைதிறன் மிக்க வினைதிறனான சேவைகளை உறுதிபடுத்தும் வகையிலும், முன்னேற்றத்தை எற்படுத்தும் வகையிலும் எமது நாட்டின் உற்பத்தி திறன் செயலகத்தால் வருடம் தோறும் முன்னெடுக்கப்படுகின்ற இப்போட்டி நிகழ்விலே தகுதியுடன் பங்கு கொண்டமையினை கெளரவித்து இந்த விஷேட விருதுக்காக கோறளைப்பற்று வடக்கு, வாகரை பிரதேச சபை தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முன் இப்பிரதேச சபையானது கடந்த 2016 ஆம் ஆண்டில் மாகாண ரீதியில் பங்குபற்றி உற்பத்தி திறன் போட்டிக்கான விஷேட விருது பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
யுத்தம் மற்றும், சுனாமி முதலான அழிவுகளால் பாதிக்கப்பட்ட வாகரை பிரதேசத்தின் இவ் பிரதேச சபையானது, கிடைக்கப்பெறுகின்ற உதவிகளை முறையாக பயன்படுத்தி, உற்சாகத்துடனும், அர்ப்பணிப்புடனும் சேவையாற்றும் ஆளணியினரின் செயலாற்றுகையினை அலுவலக ரீதியில் மதிப்பீடு செய்தும், இப்பிரதேச மக்களுக்கான சேவைகளை விரைவாகவும், உரிய முறையிலும் வழங்கி வருவதை ஆவண, ஆய்வு அடிப்படையில் உறுதி செய்தும் குறித்த போட்டிக்காக உள்வாங்கப்பட்டு, தற்போது தேசிய ரீதியில் இந்த விஷேட விருதுக்காக இப்பிரதேச சபையின் பெயர் தேசிய உற்பத்தி திறன் செயலக அதிகாரிகளால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
