
தனது குடும்பத்தினரே தன்னை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் கொடுமைப்படுத்தியதாகக் கூறி அந்த பெண் குவைத்தில் பயணம் செய்துகொண்டிருந்தபோது தனது குடும்பத்தினரிடம் இருந்து தப்பி அவுஸ்ரேலியா செல்ல முடிவெடுத்துள்ளார்.
இதற்காக தாய்லாந்தில் உள்ள சுவர்ணபூமி விமானநிலையம் வந்தவரை சவுதி மற்றும் குவைத் அதிகாரிகள் சுற்றி வளைத்ததாகவும் அவரின் பயண ஆவணங்களைப் கைப்பற்றியதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அன்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட ரஹாஃப், ”குவைத்துக்கு என்னை நாடு கடத்துவதற்காக குவைத் எயார்வேய்ஸ் விமானத்தில் அனுப்ப முடிவு செய்திருக்கின்றனர். இதை நிறுத்துமாறு தாய்லாந்து அரசிடம் கேட்கிறேன்.
தாய்லாந்து பொலிஸார் எனக்குப் புகலிடம் அளிக்கும் பணிகளைத் தொடங்க வேண்டும். மனிதத்தோடு எனக்கு உதவுமாறு கேட்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவுஸ்ரேலிய வௌிவிவகார அமைச்சர் மாரிஸ் பைனே, அவரை தங்கள் நாட்டுக்குள் ஏற்கலாமா என்பதை மதிப்பீடு செய்து கூறுவதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள தாய்லாந்து குடிவரவு திணைக்கள தலைமை அதிகாரி சுராச்சேட் ஹாபார்ன், குறித்த பெண்ணை ஏற்றுக்கொள்வது தொடர்பில் இரு நாடுகளும் பரிசீலனை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
