
அதன்படி கனேடிய நாடாளுமன்றம் அடுத்த மூன்று ஆண்டுகளில் ஒரு மில்லியன் புதிய நிரந்தர குடியிருப்பாளர்களை சேர்க்கும் திட்டங்களை அறிவித்துள்ளது.
இது ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் மக்கள் தொகையில் சுமார் ஒரு சதவீதமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2017 ஆம் ஆண்டில் 286,000 க்கும் அதிகமான நிரந்தரக் குடியிருப்பாளர்களை கனடா வரவேற்றது. இந்நிலையில் இந்த எண்ணிக்கை 350,000 ஆக இந்த வருடம் அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும் 2020 இல் 360,000 ஆகவும், 2021 இல் 370,000 ஆகவும் அதிகரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“கனடாவானது அவனைவரும் அனுபவிக்கும் வகையில் உருவாகியுள்ள வலுவான மற்றும் துடிப்பான நாடாகும் என்றும் எனவே வரலாற்றில் புதுமுகங்களை இங்கு வரவேற்கின்றோம்” என்றும் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமைகள் அமைச்சர் அகமட் ஹுஸென் தெரிவித்துள்ளார்.
