சிறப்புத் திறன் கொண்ட மாற்றுத்திறனாளிகளின் கைப்பணி
பொருள்களின் கண்காட்சி இன்று
மட்டக்களப்பில் நடைபெற்றது
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக
பிரிவுக்குற்பட்ட மட்டக்களப்பு புனித வளனார் விசேட கல்வி நிலையத்தின் சிறப்புத்
திறன் கொண்ட மாற்றுத்திறனாளிகளின் தயாரிக்கப்பட்ட பொருட்களின் கண்காட்சி கல்வி நிலையத்தில் நடைபெற்றது
புனித வளனார் விசேட கல்வி நிலையத்தின் அதிபர் எம் எ .பரிஸ்கரன் தலைமையில் மாற்றுத்திறனாளிகளின் திறன்களை விருத்தி செய்யும் வகையில் கல்வி நிலையத்தின் பிள்ளைகள் , ஆசிரியர்கள் ,
பெற்றோர்கள் ஆகியோரின் பங்களிப்பில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் இந்த
கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டன.
இந்த காண்காட்சி
நிகழ்வில் அதிதிகளாக மட்டக்களப்பு மறை மாவட்ட் ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை , மாவட்ட அரசாங்க அதிபர் எம் .உதயகுமார் மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் மற்றும் அருட்தந்தையர்கள் ,அருட்சகோதரிகள் , கல்வி நிலையத்தின் ஆசிரியர்கள் , பிள்ளைகள்
,பெற்றோர் என பலர் கலந்துகொண்டனர்
.





