LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, January 23, 2019

கொக்குவில் வீரகாளியம்மன் ஆலய உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருட்டு


மட்டக்களப்பு கொக்குவில் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றின் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் மற்றும் பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்


மட்டக்களப்பு போலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் ,கொக்குவில் கிராம சேவை பிரிவில் உள்ள ஸ்ரீ வீரகாளியம்மன் ஆலயத்தின் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் மற்றும் ஆலயத்தின் பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டிருந்த மின்சார ஒலிபெருக்கி உபகரணங்கள் திருடப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர் .

இன்று காலை அப்பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவர் வழிபாட்டிற்காக ஆலயத்திற்கு சென்ற வேளையில் ஆலயத்தின் கூரையில் ஓடுகள் கழட்டப்பட்ட நிலையில் காணப்பட்டதை அவதானித்த நபர் ஆலய நிர்வாக சபையினரிடம் தெரிவித்துள்ளார்

குறித்த சம்பவத்தை அறிந்த ஆலைய நிர்வாக சபையினர் மட்டக்களப்பு  பொலிசாருக்கு தெரிவித்துள்ளனர்

குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ள ஆலயத்திற்கு வருகை தந்த மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரிகள் ஆலயத்தில் திருடப்பட்டதாக கூறப்படும் பணம் மற்றும் பொருட்கள்  தொடர்பான விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்   






 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7