இந்து ஸ்வயம்சேவா சங்கத்தின் இளைஞர்களுக்கான வதிவிடப்பயிற்சி நெறி திருகோணமலை திருக்கடலூர் சிவானந்தா தபோவனத்தில் 14 நாட்கள் இடம் பெற்று அதன் நிறைவு நிகழ்வு நேற்று 30ம் திகதி மாலை திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளீர் கல்லூரியில் உதவி காணி ஆணையாளர் கணேசலிங்கம் ரவிராஜ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.இப்பயிற்சியில் 53 இளைஞர்கள் பங்கு கொண்டனர்.அவர்களுக்கு சிறந்த உடல் மனம் புத்தி ரீதியான விடயங்கள் ஆளுமை வளர்க்கும் பயிற்சிகள் யோகா பிராத்தனை தியானம் பஜனை மற்றும் சூரிய நமஸ்காரம் கராத்தே சிலம்பம் விசேட விளையாட்டு தற்காப்பு கலை ஆகிய பயிற்சிகள்கள் நடாத்தப்பட்டது.

நிறைவு நிகழ்வில் சங்க உறுப்பினர்களின் விசேட ஊர்வலம் ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான வளாகத்தில் ஆரம்பமாகி பிரதான வீதிகளின் ஊடாக ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி வரை இடம் பெற்றது.
அதனைத் தொடர்ந்து அவர்கள் கற்ற விடயங்களை பார்வையாளர் முன் நிகழ்த்திக்காட்டல் நிகழ்வு இடம் பெற்றது.அந்நிகழ்வில் திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான குருக்கள் சிவஸ்ரீ கைலாசசங்கர் அவர்கள் கலந்து கொண்டு ஆசியுரையும் இந்து ஸ்வயம் சேவா சங்க ஒருங்கிணைப்பாளர் இரா.இராதாகிருஸ்ணன் அவர்களும் கலந்து சிறப்புறையும் நிகழ்த்தினார்.
அ . அச்சுதன்





